அறிக்கை நாயகன் என்னை நினைக்காவிட்டால் தூக்கமே வராது.. ஸ்டாலினை போட்டுத்தாக்கும் முதல்வர்.!
அறிக்கை நாயகன் என்னை நினைக்காவிட்டால் தூக்கமே வராது.. ஸ்டாலினை போட்டுத்தாக்கும் முதல்வர்.!
![அறிக்கை நாயகன் என்னை நினைக்காவிட்டால் தூக்கமே வராது.. ஸ்டாலினை போட்டுத்தாக்கும் முதல்வர்.! அறிக்கை நாயகன் என்னை நினைக்காவிட்டால் தூக்கமே வராது.. ஸ்டாலினை போட்டுத்தாக்கும் முதல்வர்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/b3c829bdcb3b483a87be2b030007ddc0.jpg)
ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழகம் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்டாலின் அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது. நாள்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்குபெற்று திட்டங்களை துவக்கி வைத்து பேசியதாவது:
மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் ஏழை, எளிய மாணவர்கள் டாக்டர் ஆக உள்ளனர். நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1900 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது.
எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தினந்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கமே வரும். தமிழகம் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் அறையில் உட்கார்ந்து ஸ்டாலின் அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது. தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம் என்றும் கிண்டலடித்தார்.
தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும் அரசியலோடு செயல்படக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் வேகமாக குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.