Begin typing your search above and press return to search.
பீகாரில் ஆட்சியை தக்கவைக்கிறதா பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி? 123 இடங்களில் முன்னிலை.!
பீகாரில் ஆட்சியை தக்கவைக்கிறதா பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி? 123 இடங்களில் முன்னிலை.!
By : Kathir Webdesk
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பீகார் மாநிலத்தின் தேர்தல் நடந்து முடிந்தது. மூன்று கட்டங்களாக 235 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. முதல் கட்டம் 28 அக்டோபர் அன்று 71 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டம் நவம்பர் 3 அன்று 93 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டம் நவம்பர் 7 அன்று 78 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தள் (ஐக்கிய), மகாகட்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் மோதுகின்றன. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி 123 இடங்களிலும், மகாகட்பந்தன் கூட்டணி 103 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
Next Story