Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாமியவாதிகள் மிரட்டல் - அடி பணிந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்.!

இஸ்லாமியவாதிகள் மிரட்டல் - அடி பணிந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்.!

இஸ்லாமியவாதிகள் மிரட்டல் - அடி பணிந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்.!

Saffron MomBy : Saffron Mom

  |  18 Nov 2020 7:45 AM GMT

உலகமே 'மதச்சார்பற்றதாக' இருக்க வேண்டும். பேச்சுரிமை வேண்டும். ஆனால் அதே சமயத்தில், குறிப்பிட்ட சமூகத்தினரின் மத உணர்வுகளை மட்டும் 'புண்படுத்தாமல்' எல்லோரும் முட்டை மேல் நடப்பது போல கவனமாக செல்ல வேண்டும். இல்லையென்றால் அவர்களது தலை எந்நேரமும் கொய்யப்படும், அதை மலேசிய முன்னாள் பிரதமர் உட்பட பெரிய உயர்மட்ட தலைவர்கள் வந்து வெளிப்படையாகவே நியாயப்படுத்துவார்கள் என்ற நிலை நீடித்து வருகின்றது.

இந்நிலையில் கல்கத்தாவில் ஒரு காளி பூஜையை ஆரம்பித்து வைத்ததற்காக பங்களாதேஷி கிரிக்கெட் வீரர் கொலை மிரட்டல்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அதற்காக உடனடியாக வந்து மன்னிப்புக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் 'குறிப்பிட்ட சமூகத்தினருக்கு' சகிப்புத் தன்மை இல்லை என்று யாரும் கூற மாட்டார்கள்.

கொல்கத்தாவில் ஒரு காளி பூஜையில் பங்களாதேஷ் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு இஸ்லாமியவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் மன்னிப்புக் கோரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

அவரது மன்னிப்பில், ஒரு சுயநனவுள்ள (conscious) முஸ்லிம் மனிதர் என்ற முறையில் காளி பூஜையை ஆரம்பித்து வைப்பது போன்ற போன்ற எந்த ஒரு விஷயத்தையும் தான் செய்யமாட்டேன் என்றும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக தன் சக குடிமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் அந்த மேடையில் இரண்டு நிமிடங்கள் தான் இருந்ததாகவும், ஆனால் எல்லோரும் நான்தான் அதை ஆரம்பித்து வைத்தது போல் பேசுகிறார்கள் என்று சகிப் அல் ஹசன் தன்னுடைய மன்னிப்பின் போது கூறினார். "நான் இதை செய்யவில்லை ஒரு முஸ்லிமாக நான் இதை செய்ய மாட்டேன். ஆனால் நான் அங்கே சென்று இருக்கக்கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறியுள்ளார். "ஒரு முஸ்லிமாக மத சடங்குகளை நான் எப்போதும் பின்பற்றுகிறேன். நான் ஏதேனும் தவறாக செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்." என்று அந்த கிரிக்கெட்டர் மேலும் கூறியுள்ளார்.

பங்களாதேஷை சேர்ந்த ஒரு இளைஞன் ஞாயிற்றுக்கிழமை, ஃபேஸ்புக்கில் லைவ் ஆக சென்று ஷகிப் அல் ஹாசனை அடித்தே கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தார். கொல்கத்தாவில் ஒரு காளி பூஜையை ஆரம்பித்து வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

திங்கள்கிழமை காலை மறுபடியும் பேஸ்புக்கிற்கு வந்த இளைஞன், ஷகிப் அல் ஹசனிடம் மன்னிப்பு கோரினான். அவன் கூறுகையில், ஒருவரை கொலை செய்வதாக மிரட்டுவது சரியல்ல என்று தன் பிரார்த்தனைக்கு பின்பு உணர்ந்ததாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினான். மேலும் கூறுகையில், காளி பூஜையை ஆரம்பித்து வைத்த பாவத்திலிருந்து சாகிப் விடுதலை பெற வேண்டும் என்று தான் ப்ரார்தித்ததாகவும் கூறினான். "நான் அல்லா அவரை வழி நடத்தவேண்டும் என்று பிரார்த்தித்தேன். நான் கோபத்தில் நிறைய விஷயங்கள் பேசி இருந்தாலும், அது சரியல்ல அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்" என்றான்.

சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் வீரரின் மன்னிப்புக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News