மோடிக்கு எதிராக தம்கட்டி வெளியேறிய சத்ருகன் சின்ஹா - அரசியலில் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்!
மோடிக்கு எதிராக தம்கட்டி வெளியேறிய சத்ருகன் சின்ஹா - அரசியலில் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்!
By : Kathir Webdesk
பா.ஜ.க வேட்பாளராக 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் வென்றவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா. அவர் மத்திய அமைச்சர் பதவி எதிர்பார்த்து கிடைக்காததால் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை எதிர்த்து வந்தார். இருப்பினும் பா.ஜ.க-வினர் யாரும் இவரைக் கண்டுக்கொள்ளவில்லை. 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாட்னா தொகுதி வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் களமிறக்கப்பட்டார்.
இதனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதே பாட்னா தொகுதியில் போட்டியிட்டார் சத்ருகன் சின்ஹா. அவருக்கு படிதோல்வி மட்டுமே மிஞ்சியது. அதேபோல் இவரது மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவரும் படுதோல்வியையே சந்தித்தார்.
தற்போது 2020-ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா காங்கிரஸ் வேட்பாளராக பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரும் நேற்று வந்த முடிவுகளில் படுதோல்வி அடைந்துள்ளார்.
தான் ஏதோ பெரிய தலைவர் போல இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடியையே எதிர்த்து அரசியல் செய்ய ஆசைப்பட்ட சத்ருகன் சின்ஹாவின் மொத்த குடும்பமும் மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது நடுத்தெருவில் நிற்கிறது.