பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. இதனை மாநில தலைவர் எல்.முருகன் முன்னின்று நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இந்துக்களின் உரிமையை எடுத்துக் கூறிவருகிறார்.
இந்நிலையில், இன்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரைக்காக சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடலூரில் பாஜக தொண்டர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டும் ஆர்ப்பாட்டம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்துக்களின் உரிமைக்காக செல்லும் வேல் யாத்திரையை தடை செய்வது கண்டிக்கத்தக்கது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.