Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.,வின் சாதி பேச்சு.. கொலை மிரட்டல்.. வைரலான வீடியோ.!

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.,வின் சாதி பேச்சு.. கொலை மிரட்டல்.. வைரலான வீடியோ.!

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.,வின் சாதி பேச்சு.. கொலை மிரட்டல்.. வைரலான வீடியோ.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2020 3:08 PM GMT

கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மாவட்டச் செயலாளருமான செங்குட்டுவன் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த வீடியோவில் ஒரு தரப்பை ஜாதி பெயரை குறிப்பிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது மற்றொரு தரப்பை கடுமையான வார்த்தைகளால் கூறி வருகின்றார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வாட்ஸ்அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏ செங்குட்டுவன் கடுமையான கோபத்துடன் தகாத வார்த்தைகளால் பேசுகிறார். மேலும், ஜாதியை குறிப்பிட்டும் பேசுவது பதிவாகியுள்ளது.


மேலும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் தூக்கில் ஏற்றிவிடுவேன் என்று செங்குட்டுவன் கூறுவது போன்றும் அதில் இடம் பெற்றுள்ளது.
இது கிருஷ்ணகிரி திமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம். இரண்டு தரப்புக்கும் இடையே நிலம் விற்பனை தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாகவும், அதில் ஒரு தரப்பைத்தான் செங்குட்டுவன் மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


எம்.எல்.ஏ., கட்டப்பஞ்சாயத்து செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் என திமுக தொண்டர்களிடையே பரபரப்பான பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்த வீடியோவும் திமுகவை சேர்ந்தவர்தான் எடுத்து வெளியிட்டுள்ளார்.


இது போன்று ஆட்சியில் இல்லாதபோதே இப்படி செய்கின்றார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் யோசித்து தமிழக மக்கள் முடிவெடுப்பார்கள் என நம்பலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News