Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டப்பேரவைத் தேர்தல்.. அதிமுகவிடம் 40 தொகுதிகள் கேட்கிறதா பாஜக?.. அதிமுக தரப்பில் இருந்து என்ன கூறப்பட்டது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 10:52 AM GMT

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 62 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனிடையே நேற்று இரவு தனியார் ஓட்டலில் தமிழக பாஜக தலைவர், மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது மற்றும் எத்தனை தொகுதிகளை வாங்குவது உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்குமாறு அதிமுகவிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 தொகுதிகள் வரை பாஜக தரப்பில் கேட்கப்பட்ட நிலையில் 25 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருந்தே அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News