சாட்டையை கையில் எடுத்த மோடி.. தமிழில் பிரச்சாரம்? - பீதியில் எதிர்க்கட்சி தலைவர்கள்.!
சாட்டையை கையில் எடுத்த மோடி.. தமிழில் பிரச்சாரம்? - பீதியில் எதிர்க்கட்சி தலைவர்கள்.!
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் நன்கு கற்று அறிந்த அறிஞரிடம் தமிழ் சரளமாக பேச கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்து வருவதாக பெங்களூரு பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் ஐ.ஐ.எம் பெங்களூருவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய இவரின் ஐடியா தான் முத்ரா வங்கிக்கடன் திட்டம் எனவும் சொல்லப்படுகிறது.
Not many know that Modiji is learning-- speaking Tamil-- from a Gujarathi/Tamil scholar --Dumeels will be shocked when he campaigns in Tamil in TN around March-- Haryana Khattar also joining-- both will speak better than Stalin:)) Worry worry :)) RT
— RVAIDYA2000 (@rvaidya2000) November 12, 2020
அடுத்த தேர்தலில் நரேந்திர மோடி தமிழகத்தில் தமிழில் பேசி பிரசாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இவருடன் ஏற்கனவே தமிழ் நன்கு அறிந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும் இணைந்து தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்கள் என்றும், எதிர்க்கட்சி தி.மு.க மற்றும் மு.க.ஸ்டாலின் ஜாக்கிரதை என்றும் வைத்தியநாதன் தனது ட்வீட்டில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தமிழில் நீண்ட உரை ஆற்றிய வீடியோ ஒன்று சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஹரியானா மாநிலத்தில் தமிழ் இரண்டாம் மொழியாக சில ஆண்டுகள் இருந்தது. அப்போது மனோஹர் லால் கட்டார் மாணவனாக தமிழ் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.