Kathir News
Begin typing your search above and press return to search.

ஐக்கிய ஜனதாவிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்கள் -  அருணாச்சல பிரதேச 'ஷாக்'!

ஐக்கிய ஜனதாவிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்கள் -  அருணாச்சல பிரதேச 'ஷாக்'!

ஐக்கிய ஜனதாவிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்கள் -  அருணாச்சல பிரதேச ஷாக்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Dec 2020 5:14 PM GMT

அருணாச்சல பிரதேசத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக, அதன் 7 எம்.எல்.ஏ-க்களில் 6 பேர் ஆளும் பா.ஜ.க-வுக்கு கூண்டோடு மாறியுள்ளனர் என்று அம்மாநில சட்டமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல் மக்கள் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வான லிகாபாலி தொகுதியைச் சேர்ந்த கர்டோ நைகியோரும் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்த்தில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி வாக்கெடுப்பு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. ஆறு ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் முன்னதாக தலேம் தபோவை புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து அவர் தலைமையில் தனியாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளனர்.

இதே போல் அருணாச்சல் மக்கள் கட்சியின் எம்.எல்.-ஏவும் இந்த மாத தொடக்கத்தில் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பா.ஜ.கவுடன் கைகோர்த்துள்ளார். "கட்சியில் சேர விருப்பத்தை தெரிவிக்கும் அவர்களின் கடிதங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்று பா.ஜ.க-வின் அருணாச்சல பிரதேச தலைவர் பி.ஆர்.வாகே கூறினார்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், 2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 15 இடங்களில் ஏழு இடங்களை வென்றது. மேலும் 41 இடங்களைப் பிடித்த பா.ஜ.க-வுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பீகாரில் பா.ஜ.க-வுடன் இணைந்து நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், அருணாச்சலில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு தாவியுள்ளது நிதீஷ்குமாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய கட்சித் தாவலைத் தொடர்ந்து, பா.ஜ.க இப்போது 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபையில் 48 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் பலம் ஒன்றாக குறைந்துள்ளது. தற்போது அருணாச்சல பிரதேச சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News