Kathir News
Begin typing your search above and press return to search.

"ஹைதராபாத்தில் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் காவி மயமாக்கப்படும்"- தேஜஸ்வி சூர்யா உறுதி

"ஹைதராபாத்தில் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் காவி மயமாக்கப்படும்"- தேஜஸ்வி சூர்யா உறுதி

ஹைதராபாத்தில் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் காவி மயமாக்கப்படும்- தேஜஸ்வி சூர்யா உறுதி

Saffron MomBy : Saffron Mom

  |  25 Nov 2020 6:30 AM GMT

ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல் (GHMC) வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 150 வார்டுகளில் நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஆளும் கட்சியான TRSற்கு கடும் நெருக்கடி கொடுத்து பல வெற்றிகளை பெற வேண்டும் என்று பா.ஜ.க தனது முழு பலத்துடன் இறங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்திய உற்சாகத்துடன் பா.ஜ.க களமிறங்குகிறது.

நடிகர் பவன் கல்யானின் ஜன சேனா கட்சி தேர்தலில் இருந்து விலகி, பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் பா.ஜ.க MP தேஜஸ்வி சூர்யா, பா.ஜ.கவிற்காக ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இன்று அவர் தேர்தல் பரப்புரையில் பேசுகையில், ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் கூடிய விரைவில் காவி மயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.

தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஹைரபாத்தை முன்னேற்றாமல் குடும்ப ஆட்சியை மட்டுமே வளர்த்து வருவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் (KCR) மீது தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், "நாங்கள் முதலில் GHMC யில் வெற்றி பெறுவோம், தெலுங்கானா சட்டசபையில் தேர்தலில் வெற்றி பெறுவோம், தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம், பிறகு கேரளாவில் வெற்றி பெறுவோம்.தென்னிந்தியா முழுவதும் காவி மயமாக்கப்படும்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஹைதராபாத் ஒரு மகத்தான நகரம் என்றும், அதற்கு ஒரு புதிய தொலை நோக்குப் பார்வையும் ஆட்சியும் தேவைப்படும் என்றும் அதை பா.ஜ.க தலைமையால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் கூறினார்.

தெலுங்கானா பல்வேறு விதமான போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு உருவாக்கப்பட்டது என்றும் அது ஒரே ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல என்றும் கூறினார். KCR தெலுங்கானாவை 'தங்க தெலுங்கானா' வாக மாற்ற உறுதியளித்தார். ஆனால் அவருடைய குடும்பத்திற்கு மட்டும் தான் தங்கம் கிடைத்தது என்றும் அம்மாநில இளைஞர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டினார்.

பா.ஜ.கவில் மட்டுமே ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் தேசியத்தலைவர் ஆகும் அளவிற்கு உயர முடியும் என்றும் கூறினார். மேலும் சூர்யா கூறுகையில், உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் தான் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் TRS ற்கு மாற்றுக் கட்சியாக பா.ஜ.க உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் மாநிலங்களையும் தாண்டி அண்டை மாநிலங்களுக்கும், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதும், அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்தும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News