Kathir News
Begin typing your search above and press return to search.

2018ல் மூன்றாவது இடம், 2020ல் வெற்றி - தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியையே வீழ்த்தி பா.ஜ.க. சாதனை.!

2018ல் மூன்றாவது இடம், 2020ல் வெற்றி - தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியையே வீழ்த்தி பா.ஜ.க. சாதனை.!

2018ல் மூன்றாவது இடம், 2020ல் வெற்றி - தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியையே வீழ்த்தி பா.ஜ.க. சாதனை.!

Saffron MomBy : Saffron Mom

  |  10 Nov 2020 6:42 PM GMT

இன்றைக்கு, பீகார் மாநில சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளும் குஜராத், கர்நாடகா, மணிப்பூர், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பீகார் சட்டமன்ற தேர்தலில் அனைத்து முடிவுகளும் வெளிவர பின்னிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் மற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னணியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. கர்நாடகாவிலும் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கொரானா பரவல் சமயத்தில் நாடு முழுக்க பா.ஜ.கவுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது.

இதில் தெலுங்கானாவில் ஒரே ஒரு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. ஏனெனில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரும்பாலும் பா.ஜ.க ஆளும் கட்சியாக உள்ளது.

ஆனால் தெலுங்கானாவில் இரண்டாவது எதிர்க்கட்சியாக இருக்கிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (TRS) MLA திடீரென மரணம் அடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப நடந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சியான பா.ஜ.க வெற்றி பெற்று இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பது இந்திய அரசியலில் ஒரு எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. இத்தனைக்கும் TRS சார்பாக நின்றது, இறந்து போன MLA வின் மனைவி. இது போன்ற சமயங்களில் அனுதாப அலை வீசுவதும் சகஜம். தன்னுடைய ஆளும்கட்சி பலத்தையும் இடைத்தேர்தலில் காட்டியும் ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வி அடைந்திருப்பது சந்திரசேகர ராவின் பெயருக்குக் கிடைத்துள்ள பெரும் பின்னடைவாக காணப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கிய நாளிலிருந்து பா.ஜ.க தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ரகுநந்தன் ராவும் ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் சுஜாதாவும் மோதினர்.

இந்த இடைத் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்றது. மேலும் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பா.ஜ.க, TRS மற்றும் காங்கிரசுக்கு இடையேதான் போட்டி நிலவியது.

இந்த தேர்தலின் முடிவு TRS தலைமையில் ஆட்சியில் இருக்கும் ஆட்சிக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், (120 எம்எல்ஏக்கள் இருக்கும் சபையில் TRS பலம் மட்டும் 100 பேர்) இந்தத் தொகுதியை இழந்தது அவர்களுடைய இமேஜுக்கு ஒரு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாங்கள் இன்னும் அசைக்க முடியாத சக்தியாக தான் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவும், சமீபத்திய எதிர்காலத்தில் கூட யாரும் அவர்களை தோற்கடிக்க முடியாது என்று காட்டவும் இத்தேர்தல் உதவியாக இருக்கும் என்று நம்பியது

ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் வந்த இந்த தேர்தல் முடிவு பா.ஜ.க, ஒருவழியாக காங்கிரசை முக்கிய எதிர்க் கட்சியாக இருப்பதில் இருந்து நீக்க ஆயத்தம் ஆகி விட்டதா என்ற என்ற விவாதங்களையும் கிளப்பும்.

120 பேர் இருக்கும் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் இருக்கின்றனர். பா.ஜ.கவிற்கு ஒருவர் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் 2019 ஆம் வருடம் நடந்த பொதுத்தேர்தல்களில் 20 சதவிகித வாக்குகளை பெற்று வெறும் எண்கள் மட்டும் தங்கள் பலம் அல்ல என்று பா.ஜ.க நிரூபித்திருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 7 சதவிகிதமாக இருந்த பா.ஜ.கவின் ஓட்டு பங்கு 2019ல் 19 சதவீதமாக உயர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள 4 பாராளுமன்ற சீட்டுகளை கைப்பற்ற உதவியது. அப்பொழுது TRS 9 சீட்டுகளையும், காங்கிரஸ் மூன்று சீட்டுகளையும் வென்றன. பா.ஜ.க தனது செகந்திராபாத் தொகுதியை மட்டுமல்லாமல் வடக்குப் பக்கமாகவும் விரிவடைந்தது.

குறிப்பிட்ட அதிர்ச்சியாக, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கே அவர்கள் தோல்வியை பரிசாக வழங்கினர். அதுமட்டுமல்லாமல் TRS ன் பாரம்பரிய இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க, காங்கிரஸினால் விடப்பட்ட வெற்றிடத்தை நிறைவு செய்வதாக தெரிகிறது. 2018 சட்டசபை தேர்தலின் பொழுது தன்னுடைய மூன்றில் இரண்டு பங்கு MLA க்களை TRS இடம் காங்கிரஸ் இழந்து வலுவிழந்தது.

அந்த மாநிலத்தில் கணிசமான அளவு முஸ்லீம் மக்கள்தொகை இருக்கும் நிலையில், CAA , ஜம்மு காஷ்மீர் 370 பிரிவு நீக்குவது, AIMIM முஸ்லிம்களுக்கு அளித்த 12% வாக்குறுதி போன்ற விஷயங்களுக்காக பா.ஜ.கவிற்கு ஆதரவு பெருகியிருக்கலாம்.

கூடிய விரைவில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதி என அமித் ஷா கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News