திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்த தி.மு.க - தேர்தல் நெருங்க நெருங்க பீதியாகும் அறிவாலயம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்த தி.மு.க - தேர்தல் நெருங்க நெருங்க பீதியாகும் அறிவாலயம்.!
By : Mohan Raj
தி.மு.க நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. அதன் குடும்ப அரசியல், மூத்த உடன்பிறப்புகளை மதிக்காமல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பம் செயல்படுவது, கட்சிக்காக உழைத்தோர்களை விட பணம் படைத்தவர்கள், வாரிசுகள் போன்றவர்களை பதவியில் நியமிப்பது, மக்கள் மத்தியிலும் தி.மு.க என்றாலே நினைவுக்கு வரும் ஊழல் முகம், ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு என அத்துனை அரசியல் இழி செயல்களும் தி.மு.க'வில் பிரதானமாக இருப்பது போன்ற காரணங்களால் தி.மு.க நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. போதாக்குறைக்கு கட்சிக்குள்ளே பதவிக்காக நிர்வாகிகள் மோதிக்கொள்ளும் சமீபத்திய செயல்கள் தி.மு.க தலைமையை திக்குமுக்காட செய்துள்ளன. இதனால் தற்பொழுது தேர்தல் வரும் வேளையில் கட்சியை பலப்படுத்த தி.மு.க அதிக நிர்வாகிகளை நியமித்து வருகிறது.
அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கிழக்கு, மத்திய, மேற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருவள்ளூர் கிழக்கு - திருவள்ளூர் மத்திய - திருவள்ளூர் மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என அறிவித்துள்ளார்.
இதன் முறையே,
1.திருவள்ளூர் மத்திய மாவட்டம்
* ஆவடி
* பூவிருந்தவல்லி (தனி)
2. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
* கும்முடிப்பூண்டி
* பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர் மேற்கு
* திருத்தணி
* திருவள்ளூர்
மாவட்டம் எனவும் பிரிக்கப்பட்டு அதில்,
திருவள்ளூர் மத்திய மாவட்டம் பொறுப்பாளராக ஆவடி சா.மு.நாசர் என்பவரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொறுப்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் என்பவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொறுப்பாளராக எம்.பூபதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் இது எந்த அளவிற்கு கை கொடுக்கும் என சந்தேகத்திற்குரியதாக உள்ளது.