Kathir News
Begin typing your search above and press return to search.

சமஸ்கிருதத்தில் உறுதி மொழி - இளம் நியூஸிலாந்து MP கலக்கல்.!

சமஸ்கிருதத்தில் உறுதி மொழி - இளம் நியூஸிலாந்து MP கலக்கல்.!

சமஸ்கிருதத்தில் உறுதி மொழி - இளம் நியூஸிலாந்து MP கலக்கல்.!

Saffron MomBy : Saffron Mom

  |  26 Nov 2020 6:30 AM GMT

உலகம் முழுவதும் பல இடங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சாதனைகளை புரிந்து வரும் செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் நியூசிலாந்தில் சமீபத்தில் தேர்தல்கள் நடந்து முடிந்து ஆளுங்கட்சியான லேபர் கட்சி வெற்றி பெற்று ஜெசிண்டா ஆர்டன் மறுபடியும் நியூசிலாந்து பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நியூசிலாந்தின் இளமையான மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரை சேர்ந்த 33 வயது நிரம்பிய கௌரவ் ஷர்மா நியூசிலாந்தின் ஹேமில்டன் தொகுதியிலிருந்து லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூலாந்திற்கான இந்திய ஹை கமிஷனர், முக்தேஷ் பர்டெஷி ட்வீட் செய்கையில், "நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இளமையான, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் ஒருவரான கௌதம் ஷர்மா இன்று சத்தியப் பிரமாணம்/உறுதி மொழி எடுத்துக் கொண்டார். முதலில் நியூசிலாந்தின் பூர்வீக மவுரி மொழியிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலும் பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து கலாச்சாரங்கள் இரண்டிற்கும் அவர் ஆழ்ந்த மரியாதை செலுத்தினார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் தனது ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியில் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டதாக கவுரவ் ஷர்மா தகவல் தெரிவித்திருக்கிறார். இந்தியாவிற்கு வெளியே சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட இரண்டாவது நபர் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்த்தில் தனது எம்பிபிஎஸ் மற்றும் அமெரிக்காவில் தன்னுடைய எம்பிஏ பட்டத்தை பெற்றுள்ளார். ஹமில்டனில் அவர் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

ஒருவர் ட்விட்டரில் சர்மாவிடம் ஏன் இந்தியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை? என்று கேட்டபொழுது, அவர் "முதலில் நான் அதை நினைக்க தான் செய்தேன். ஆனால் பஹாரி என்னுடைய தாய்மொழி, அதில் செய்வதா அல்லது பஞ்சாபியில் செய்வதா என்ற கேள்வியும் எழுந்தது. எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. அதனால் சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை செலுத்துவது போல் இருக்கும். (நான் பேச முடியாத மொழிகளையும் சேர்த்து) என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு இந்திய வம்சாவளித் தலைவர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புதிய அமைச்சரவையில் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரானார்.

இந்தியாவில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் 41 வயதானவர். சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டு உயர்கல்விக்காக நியூசிலாந்து சென்றார். இந்தியர்களுக்கு எங்கு சென்றாலும் நல்ல மரியாதையும், வரவேற்பும், கௌரவமும் கிடைப்பது நம் நாட்டின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News