சாலையில் நடந்து சென்று தொண்டர்களுக்கு வணக்கம் சொன்ன மத்திய அமைச்சர்.!
சாலையில் நடந்து சென்று தொண்டர்களுக்கு வணக்கம் சொன்ன மத்திய அமைச்சர்.!
By : Kathir Webdesk
தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை துவக்கி வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் அமித்ஷா தங்கும் ஓட்டல் வரை சாலையின் இரு புறமும் கூடியுள்ள கட்சி தொண்டர்கள், ஆடல், பாடலுடன், வரவேற்றனர். விமான நிலையத்தின் வெளியே காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சாலையில் நடந்து சென்றபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டார். அப்போது அவர், தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், கையசைத்தபடி நடந்து சென்றார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.