சவுண்ட் குறைக்க முடியாது, தேவையில்லாம சீண்டாதீங்க! காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய திருமாவளவன்.!
சவுண்ட் குறைக்க முடியாது, தேவையில்லாம சீண்டாதீங்க! காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய திருமாவளவன்.!
By : Mohan Raj
அரசியல்வாதிகளின் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடக்க வேண்டும், அப்படி இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்தால் அதனை காவல்துறை சரி செய்ய வருகையில் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆனால் தமிழகத்தில் சில கட்சிகள் குறிப்பாக தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
அதனை தடுக்கு காவல் துறை வரும்போது அவர்களையும் மிரட்டுகின்றனர். சமீபத்தில் உதயநிதி ஒரு காவல் துறை அதிகாரி பெயரே சொல்லி "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பார்த்து கொள்கிறோம்" என மிரட்டினார். கனிமொழி ஆம்புலன்ஸ்க்கு வழி விடமாட்டேன் வேறு வழியில் போகட்டும் என திமிராக கூறினார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனும் போலீசை மிரட்டியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திருமாவளவன் பேசும் போது பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கி'கள் அதிக சத்தத்துடன் இருப்பதாக காவல் துறை'யை சார்ந்தவர்கள் சென்று ஒலியின் அளவை குறைக்க சொல்லும் போது திருமாவளவன் மேடையிலேயே அவர்களை மிரட்டினார்.
அவர் பேசும்போது, "ஏப்பா சவுண்ட் எல்லாம் குறைக்க முடியாது, ஏன் குறைக்கனும்? நான் பேசி முடிஞ்ச அப்புறம் பாத்துக்கலாம். இப்ப 500 பேர் இருக்காங்க நான் போராட உட்காந்தா 5000 பேர் வந்துடுவாங்க" என திமிறாக பேசினார். மேலும் அவர், "காவல்துறையில் சாதி வெறிபிடித்தவர்கள் அதிகம் உள்ளனர்" என்றும் ஒருமையில் காவல்துறை அதிகாரிகளை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
ஆட்சியிலும் இல்லாத நிலையில் இப்பொழுதே அதிலும் காவல்துறை அதிகாரிகளை அதுவும் பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என தடுத்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வி.சி.க திருமாவளவன் மற்றும் அவரது கூட்டணி கட்சி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் அராஜகம் செய்யுமோ என மக்கள் முனுமுனுத்துக்கொண்டே சென்றனர்.