கர்நாடக மாநில அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியானது. அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அமைச்சரவையில் யார் -யாருக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை டெல்லி மேலிட தலைவர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. புதிய அமைச்சரவை பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாத காரணத்தால், அமைச்சரவை பதவியேற்பு மேலும் தள்ளிப்போகின்ற நிலை உருவாகியுள்ளது.
இது பற்றி முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளதாவது: அமைச்சரவை விரிவாக்கம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசினேன். அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் 3 நாட்களில் நடைபெறும்.
அமைச்சரவை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.