Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு துணை முதல்வர்கள்.. பா.ஜ.கவின் திட்டம் என்ன?

இரண்டு துணை முதல்வர்கள்.. பா.ஜ.கவின் திட்டம் என்ன?

இரண்டு துணை முதல்வர்கள்.. பா.ஜ.கவின் திட்டம் என்ன?

Saffron MomBy : Saffron Mom

  |  21 Nov 2020 8:00 AM GMT

அரசியலில் முக்கிய எதிர்க் கட்சியாக இருந்து ஆளுங்கட்சியாக மாறுவது ஓரளவு எளிது. ஒரு தேர்தல் போனால் அடுத்த தேர்தல்..ஆனால் ஆளும் கூட்டணியில் வெகு நாள் இருந்து, தனியாக நின்று வெற்றி பெறும் அளவு செல்வாக்குப் பெறுவது கடினம்.

பிஹாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. கூட்டணியில் JD(U) குறைவான இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி, அதன் தலைவர் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால் துணை முதலமைச்சர் சுஷில் மோடிக்கு பதிலாக வேறு இரண்டு துணை முதலமைச்சர்களை பா.ஜ.க அழைத்து வந்தது பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஏனெனில் துணை முதலமைச்சர் தர்க்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவருமே தீவிரமான RSS பின்னணியிலிருந்து வந்தவர்கள். நிதீஷ் குமாருடன் ஒரு நல்ல பணி நிமித்தமான உறவைக் கொண்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் ஜே பி நட்டா தலைமையிலான பா.ஜ.க, பிஹார் உள்ளூர் அரசியலில் மெதுவாக ஒரு வலுவான போட்டியாளராகவும், வருங்காலத்தில் தனியே நின்று வெற்றி பெறும் அளவிற்கு வலிமையை வளர்த்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் எனவும் யூகிக்கப்படுகிறது.

ரேணு தேவி, பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் அரசியல்வாதி. அவர் நோனியா சமூகத்தைச் சேர்ந்தவர். இது மிகவும் பின்தங்கிய சமூகங்களில் (EBC) ஒன்றாக கருதப்படுகிறது. இச்சமூகம் இதுவரை நிதிஷ்குமாரிற்கு ஆதரவாக வாக்களித்து வருகிறது.

ரேணு தேவி, தேர்தலில் பெட்டியா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். அவர் இதற்கு முன்பு நான்கு தடவை பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000, 2010, 2020 மற்றும் 2005இல் இரண்டு முறை. 2015 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

1958 நவம்பரில் பிறந்த ரேணு தேவி, அந்த நாட்களில் நடைமுறையில் இருந்த அவரது சமூகத்தின் பழக்க வழக்கங்களின் படி சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டார். 1973-ஆம் ஆண்டில் அவரது கணவர் துர்கா பிரசாத் (கொல்கத்தாவில் ஒரு பொறியாளர்) திடீரென இறந்த பிறகு, அவர் பெட்டியாவிற்கு திரும்பி, மேலும் படிக்க ஒரு கல்லூரியில் சேர்ந்தார்.அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என தனது இரண்டு சிறிய குழந்தைகளை வளர்ப்பதற்கான கூடுதல் பொறுப்புகளும் இருந்தது.

ரேணு தேவி, பாபாசாகேப் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1981ஆம் ஆண்டு சமூக ஆர்வலராக உருவானார் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் துர்கா வாகினி பெண்கள் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1988 இல் ஆர்எஸ்எஸின் மகிளா மோர்ச்சா (மகளிர் பிரிவில்) சேர்ந்தார். 1989ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அம்பாறை மாவட்ட மகளிர் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பா.ஜ.கவின் பிஹார் மகிளா மோர்ச்சாவின் தலைவராக 1993லும், 1996லும் தேர்வு செய்யப்பட்டார். 2014 மற்றும் 2020 கிடையில் பா.ஜ.கவின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தார். மேலும் அமித் ஷா மூலம் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.

துணை முதல்வர் பதவியுடன் பா.ஜ.கவின் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவராகவும் ரேணு நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க திட்டங்கள் என்னென்ன என்பது இப்போது தெளிவாகி வருகிறது என்று பலரும் கூறுகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News