கைலாசநாதர் கோவில் விபூதி பிரசாதத்தை ஏற்க மறுத்த உதயநிதி - அப்பாவுக்குத் தப்பாத பிள்ளை.!
கைலாசநாதர் கோவில் விபூதி பிரசாதத்தை ஏற்க மறுத்த உதயநிதி - அப்பாவுக்குத் தப்பாத பிள்ளை.!
By : Yendhizhai Krishnan
கந்தசஷ்டியையும் முருகக் கடவுளையும் இழிவாக சித்தரித்த கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருந்து கொண்டு, இந்து விரோதி பட்டத்தை மாற்றும் முயற்சியில் பல தி.மு.க தலைவர்களும் தி.மு.க இந்துக்களின் எதிரி அல்ல என்றும், தி.மு.க உறுப்பினர்கள் 90% பேர் இந்துக்கள் தான் என்றும் முட்டுக் கொடுத்து வந்த நிலையில், திமுகவின் உண்மையான முகத்தை தலைவர் மு க ஸ்டாலின் மகனும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
கனிமொழி உட்பட முக்கிய திமுக தலைவர்களுக்கே தெரியாமல் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க திருக்குவளைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், திருச்சியில் தி.மு.கவினர் ஏற்பாடு செய்திருந்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து தி.மு.கவின் இந்து விரோத கொள்கையை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
கருப்பர் கூட்டம் பிரச்சினைக்கு பின் தி.மு.க வேறு வழியில்லாமல் தாங்கள் இந்து விரோதி அல்ல என்பதைக் காட்டிக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் கூறி வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் தனது மகள் கையில் மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்திருந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட போதே இத்தகைய யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அப்போதே தனக்கும் தனது மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் மகளின் விருப்பத்துக்காகவே பதிவிட்டதாகவும் உதயநிதி "தெளிவுபடுத்தியது" குறிப்பிடத்தக்கது.
— Udhay (@Udhaystalin) August 23, 2020
சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. pic.twitter.com/4s0csUBP43
— Udhay (@Udhaystalin) August 24, 2020
இதற்குப் பின்னும் தி.மு.க இந்து விரோதக் கட்சி அல்ல என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே புறக்கணிப்பதாகவும் தி.மு.கவினர் கூறி வந்தனர். எனினும் கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி விட்டு தேவர் குரு பூஜையில் திருநீற்றைக் கீழை கொட்டிய தனது தந்தை போலவே, உதயநிதியும் திருச்சியில் தி.மு.க பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த பூர்ண கும்ப மரியாதையையும் விபூதி, குங்கும பிரசாதத்தையும் ஏற்க மறுத்து இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்து இருக்கிறார்.
கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை மற்றும் பரிவட்டம் கட்ட திருச்சி தி.மு.க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் சிவாச்சாரியார்கள் கும்ப மரியாதை செய்து பரிவட்டம் கட்ட முயன்ற போது அதை ஏற்க மறுத்த உதயநிதி, அவர்களை தனது நெற்றியில் விபூதி, குங்குமப் பிரசாதத்தை வைக்கவும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் இவர் தேர்தலில் வெற்றி பெற்று யாருக்கு ஆதரவாக செயல்படுவார் என்று மக்கள் பேசி வருவதோடு, இந்நிகழ்வு தி.மு.கவினர் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.