Kathir News
Begin typing your search above and press return to search.

Unfollow செய்த இந்திய எம்.பி, அதிர்ச்சியில் பாரக் ஒபாமா - இது காங்கிரஸ் காமெடி டைம்!

Unfollow செய்த இந்திய எம்.பி, அதிர்ச்சியில் பாரக் ஒபாமா - இது காங்கிரஸ் காமெடி டைம்!

Unfollow செய்த இந்திய எம்.பி, அதிர்ச்சியில் பாரக் ஒபாமா - இது காங்கிரஸ் காமெடி டைம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 2:27 PM GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது அரசியல் வாழ்க்கை நினைவுகளை "The Promised Land" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அரசியல் தலைவர்களை குறித்து தனது அனுபங்களின் பால் சொந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த புத்தகத்தில் இந்தியாவை சேர்ந்த ராகுல் காந்தியை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் "ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர். ஒரு மாணவராக இருப்பதால், அவர் பாடங்களை செய்து ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஆழமாக எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் அல்லது ஆவல் இல்லை".

இது இந்தியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பா.ஜ.க-வினர் ராகுல் காந்தியை கலாய்த்துத் தள்ள, காங்கிரஸினரோ ஒரு அயல்நாட்டு தலைவர் இந்திய தலைவர் பற்றி அவதூறாக பேசக்கூடாது என புலம்பித் தீர்க்கின்றனர்.

இதில் ஒரு படி மேலேப் போய், காங்கிரஸ் கட்சியை சார்ந்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை தனது ட்விட்டர் கணக்கில் இருந்து Unfollow செய்து விட்டதாக ஒரே போடாக போட்டுள்ளார்.

இதை படித்த நெட்டிசன்கள் இந்த எம்.பி-யின் சொந்த மாநிலமான தமிழகத்திலேயே இவரை யாருக்கும் தெரியாது, இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாராக் ஒபாமாவை Unfollow செய்தால் அவர் என்ன அதிர்ச்சியாகப் போகிறாரா என்ற தொனியில் கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒரு ட்விட்டர்வாசி "இது ஒபாமாவுக்கு எவ்வளவு பெரிய பேரிழப்பு - உடனடியாக தனது புத்தகத்தை அவர் திரும்பப்பெற வேண்டும்" என ஓட்டித் தள்ளியுள்ளார்.

இன்னொரு ட்விட்டர்வாசி "நீங்கள் ஒபாமாவை ட்விட்டரில் Unfollow செய்ததால் அவரின் செல்வாக்கு கணிசமாக குறைந்து விட்டது, அவர் தற்போது ஆடிப்போயுள்ளார்" என மாணிக்கம் தாக்கூரை வெச்சி செய்துள்ளார்.

ஆக மொத்தம், மாணிக்கம் தாக்கூர் காங்கிரஸின் காமெடி டைமாக மாறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News