Kathir News
Begin typing your search above and press return to search.

அதிமுக, திமுக இடையே என்ன உறவு? ட்விஸ்ட் போடும் பாஜக.!

அதிமுக, திமுக இடையே என்ன உறவு? ட்விஸ்ட் போடும் பாஜக.!

அதிமுக, திமுக இடையே என்ன உறவு? ட்விஸ்ட் போடும் பாஜக.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Nov 2020 11:47 AM GMT

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடந்த 6மக தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் வேல் யாத்திரைக்கு சென்றபோது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேல் யாத்திரை குறித்த வழக்கில் நீதிமன்றம் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாஜக கொடியுடன் போனாலே கைது செய்கின்றனர். இதே போன்று திமுக கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை? மேலும் தமிழக காங்கிரஸ் நடத்திய கூட்டத்துக்கும் தடுப்பு நடவடிக்கை இல்லை.

அதிமுக, திமுக இடையே இருக்கும் உறவு என்ன? உங்களுக்கிடையே என்ன அப்படி புரிதல் இருக்கிறது? ஆன்மீகம், அரசியலை கலக்கக்கூடாது என்கின்றனர். அரசு விழாக்களிலும் கூட முதல்வர், அமைச்சர்கள் அரசியல் பேசிக்கொண்டுதான் உள்ளனர். பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். கைது நடவடிக்கைகளை எதிர்த்து தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News