Kathir News
Begin typing your search above and press return to search.

நிதிஷ் மீண்டும் முதல்வரா தொடருவாரா? என்ன நடக்கிறது பா.ஜ.க.!

நிதிஷ் மீண்டும் முதல்வரா தொடருவாரா? என்ன நடக்கிறது பா.ஜ.க.!

நிதிஷ் மீண்டும் முதல்வரா தொடருவாரா? என்ன நடக்கிறது பா.ஜ.க.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2020 4:25 PM IST

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் பா.ஜ.க., கூட்டணி பெரும்பான்மைன இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க., 74 தொகுதிகளை கைப்பற்றி 2வது தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதலமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு சிபாரிசு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து, ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசையும் அளித்தார்.

நிதிஷ்குமாரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதலமைச்சராக தொடருமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (இன்று) மதியம் 12.30 மணிக்கு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் யார் முதலமைச்சர் என்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவுகளை காங்கிரஸ் உட்பட பலர் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News