திமுகவில் வெடிக்குமா பூகம்பம்.. துரைமுருகன், பொன்முடி ராஜினாமாவா? அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
திமுகவில் வெடிக்குமா பூகம்பம்.. துரைமுருகன், பொன்முடி ராஜினாமாவா? அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
By : Kathir Webdesk
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சட்டத்துறை அமைச்சர் முறைகேடாக குவாரி ஒப்பந்தத்தை எம்.எல்.ஏ. மகனுக்கு வழங்கியுள்ளார். எனவே அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று காரசாரமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதில், திமுக எம்.எல்.ஏ., துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மனைவி பெயரில் காட்பாடியில் குவாரி டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் ராஜினாமா செய்வார்களா..? அவர்களை ஸ்டாலின் ராஜினாமா செய்ய சொல்வாரா..? பொன்முடி கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது, அவரது மகனுக்கு செம்மண் குவாரி அமைக்க அனுமதி வழங்கினார். அவரையும் சேர்த்து ராஜினாமா செய்ய சொல்வாரா?..
மேலும், துரைமுருகன் மற்றும் பொன்முடியை கட்சியில் இருந்து நீங்கள் நீக்க இயலாமலும், அவர்களை கட்சிப்பதவியில் இருந்து விலக வைக்க முடியாமலும் தவித்து வரும் வேளையில், உங்களின் சித்து வேலைகளை இங்கு காண்பிக்கிறீர்களா?’’ என்று காட்டமாக பதில் கூறியுள்ளார்.
ஏற்கனவே திமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. பதவியில் உள்ளவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின்ஆளுமையை காண்பிக்க பல்வேறு வேலைகள் செய்து வருவதாக தகவல் வெளியாகி வரும் சூழலில் தற்போது அமைச்சரின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்து.