Top
undefined
Begin typing your search above and press return to search.

அபுதாபியில் இருந்து புதுச்சேரி திரும்பிய தந்தை மகனுக்கு கொரோனா.!

அபுதாபியில் இருந்து புதுச்சேரி திரும்பிய தந்தை மகனுக்கு கொரோனா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 May 2020 1:23 PM GMT

கோயம்பேட்டில் தொடர்பில் இருந்த புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அவருடைய மனைவி, குழந்தை மற்றும் தனியார் நிறுவன ஊழியருடன் தொடர்புடைய பண்டசோழநல்லூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய 4 பேரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதோடு அரும்பார்த்தபுரம் ஊழியருடன் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த பைனான்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அபுதாபியில் இருந்து புதுச்சேரி திரும்பிய 4 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதில் தந்தை- மகன் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 2 பேரின் பரிசோதனை முடிவு இன்று மாலை தெரிய வரும். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Next Story