Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : காங்கிரஸ் அரசை கண்டித்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. வினர்.!

புதுச்சேரி : காங்கிரஸ் அரசை கண்டித்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. வினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 May 2020 11:58 AM GMT

தேசிய ஊரடங்கு காரணம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பசியை போக்கும் வகையில் மத்திய அரசு இலவசமாக அரிசி மற்றும் பருப்பை வழங்கியது. மத்திய அரசு அனுப்பி இலவச அரிசி மற்றும் பருப்பை புதுச்சேரி மாநில மக்கள் பெற்றுக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் வருமை கோட்டிற்கு மேல் உள்ள 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச அரிசி வழங்க வேண்டுமென என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர் கட்சியினர் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர் இதனையடுத்து வருமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 3மாதத்திற்கு 30கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.


இந்நிலையில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில தலைவருமான சாமிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் குடிமைபொருள் வழங்கல் துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், கையில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி அரசு அறிவித்த இலவச அரிசியை வழங்கக்கோரி ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


மேலும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள், சிவப்பு அட்டைகளாக மாற்றப்பட்டதன் காரணமாக கஷ்டப்பட்டு வருவதாகவும் மேலும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்காமல் மதுபானக்கடைகளை திறக்க அமைச்சரவையை கூட்டுவதாக முதலமைச்சர் நாராயணசாமி மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் குற்றம்சாட்டி உள்ளர். ஆளும் காங்கிரஸ் இலவச அரிசி வழங்கும் வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் எச்சரித்துள்ளனர்.

Next Story