Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : மது அருந்தும் பார்களில் திடீர் ஆய்வு செய்ய கலால்துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.!

புதுச்சேரி : மது அருந்தும் பார்களில் திடீர் ஆய்வு செய்ய கலால்துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Oct 2020 11:02 AM GMT

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ள தகவலில், வாழ்வாதாரத்திற்கான கூடுதல் வழிகள் மேலும் திறக்கப்படுகின்றன. நெரிசலான கூட்டங்களும் தொற்றை பரப்ப முக்கிய காரணமாக உள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள்.

புதுச்சேரி அரசு நிர்வாகம் தொற்று சோதனைகளை அதிகளவில் செய்கிறது. அறிகுறி இருந்தால் முன்கூட்டியே மருத்துவமனையை நாடுங்கள். தற்போது மது அருந்தும் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய கலால்துறையினர் திடீர் சோதனைகள் செய்ய வேண்டும். சோதனையை விடியோ பதிவு செய்ய வேண்டும். இது சட்ட நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும். விதிமுறைகளை கடைபிடிப்பதில் அனைவரும் ஒத்துழையுங்கள்.

ஒரு தவறு மேலும் பல இறப்புகளுக்கும், அதிகமான சிகிச்சை தேவையையும் கொண்டு வர வாய்ப்பை உருவாக்கி விடும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை நாம் தடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளும் இத்தடுப்பில் பங்கு வகிக்க வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story