Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : பள்ளியை இழுத்து பூட்டிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.!

புதுச்சேரி : பள்ளியை இழுத்து பூட்டிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Oct 2020 12:00 PM GMT

புதுச்சேரியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கடந்த ஐந்தாம் தேதி திறக்கப்படும் என்றும் எட்டாம் தேதி முதல் வகுப்புகளுக்கு மாணவர்கள் வந்து தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்து இருந்தது.இந்த அறிவிப்புக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை அரசு திறக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.


ஆனால் சந்தேகத் வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்து இன்று மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கடலூர் சாலையில் உள்ள அந்தோணியார் பள்ளியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பள்ளி வளாகத்திற்குள் வந்து உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பள்ளிகள் திறக்க கூடாது என வலியுறுத்தியும் பள்ளி கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து பள்ளியில் இந்த மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து கூறிய சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மாணவர்கள் நலனே முக்கியம் என்றும் மாணவர்கள் உயிரோடு விளையாடும் அரசை கண்டித்தும் இதுபோன்று மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து நாளை கல்வித்துறை வளாகம் முற்றுகை இடப்படும் எனவும் தெரிவித்தார்.




Next Story