Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யஆளுநரிடம் மனு.!

புதுச்சேரி : மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யஆளுநரிடம் மனு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Oct 2020 12:03 PM GMT

புதுச்சேரி மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிரைவேற்றாமல் புதுச்சேரி ஆளும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுவையைத் தமிழகத்தோடு இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.


முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பாஜனகவினர் ஊர்வலம் நடத்தினர். காமராஜர் சாலை - நேரு வீதி சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், எம்எல்ஏக்கள் சங்கர், செல்வகணபதி முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தது. தலைமைத் தபால் நிலையம் முன்பு காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை சென்று மனு அளித்தனர்.


அதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டைத் திட்டமிட்டு நாராயணசாமி பரப்புகிறார். ஆதாரம் இருந்தால் நாராயணசாமி தரலாம். அவர் சொல்வது பொய். அவர் கூறுவதுபோல் இணைப்பு தொடர்பாக எதுவும் நடக்கவில்லை. நாராயணசாமி பதவி விலக வேண்டும். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மனு தந்துள்ளோம் என தகவல் தெரிவித்தார்.

Next Story