Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : பொய் பிரச்சாரம் செய்துவரும் முதல்வர் - பா.ஜ.க.வினர் போராட்டம்

புதுச்சேரி : பொய் பிரச்சாரம் செய்துவரும் முதல்வர் - பா.ஜ.க.வினர் போராட்டம்

VinithaBy : Vinitha

  |  9 Oct 2020 10:29 AM GMT

புதுச்சேரி பா.ஜ.க.வினர் தலைவர் சாமிநாதன் தலைமையில் வியாழக்கிழமை முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதுடன், முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக "தேசத் துரோக" செயலுக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி துணை ஆளுநர் கிரண் பேடியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்ற‌ ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் முன் தொடர்ந்து கூறி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு புதுச்சேரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்த நிலையில் பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புதுச்சேரி அரசிடம் இருந்து நிலம், நிதி, மக்கள் திட்டங்களுக்கான அதிகாரங்களைப் பறித்து தமிழகத்தோடு இணைப்பது என்பதுதான் மத்திய பாஜக அரசின் சதித் திட்டம் என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் நலத்திட்டங்கள் தடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரே அளித்த இந்த அறிக்கை புதுச்சேரி மக்களிடையே அச்சம், எச்சரிக்கை, ஒற்றுமையின்மை, பகை மற்றும் வெறுப்பு உணர்வை உருவாக்கும் என்று சாமிநாதன் தனது குறிப்பில் தெரிவித்தார். இது மத்திய அரசுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய மக்களைத் தூண்டுவதோடு பொது அமைதியைக் குலைக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, புதுச்சேரி ஆளுநர் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது) பிரிவின் கீழ் ஒரு விரிவான விசாரணையை மேற்கொண்டு முதல்வருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக இநாதிய தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ (தேசத்துரோக தண்டனை) பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Next Story