Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது.!

புதுச்சேரி : காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 May 2020 11:14 AM GMT

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக ஊதியத்தை வழங்கவில்லை.


மேலும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், கோரோனாவின் போது பணி புரியும் ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்றவற்றை வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி எதிராக கண்டன கோஷங்களை எழுப்புய அவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.




Next Story