Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : 14 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மக்களின் குறைகளை கேட்கப்படும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு.!

புதுச்சேரி  : 14 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மக்களின் குறைகளை கேட்கப்படும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2020 10:02 AM GMT

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவியேற்றதில் இருந்து வாரந்தோறும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணிமுதல் 6 மணிவரை பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அதற்கான தீர்வையும் அளித்தார் இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த குறைகேட்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் மக்கள் குறைகேட்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்களின் குறைகளை கேட்கும் நிகழ்வை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறார். கோவிட் விதிமுறைகளை பின்பற்றி திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் 6 மணிவரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே மக்களின் குறைகளை கேட்கிறார்.


வருகிற 14-ந்தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. அப்போது அவரிடம் தங்கள் குறைகளை கூற விரும்பும் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை 0413-2337144, 2334050, 2334051 ஆகிய எண்களின் மூலம் அழைத்து பதிவு செய்யலாம். பொதுமக்களின் குறைகள் துணைநிலை ஆளுநர் மற்றும் அவரது குழுவினரால் 95005 60001 என்ற வாட்ஸ் அப் வீடியோ எண்ணில் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story