Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : 19 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!

புதுச்சேரி : 19 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sep 2020 9:52 AM GMT

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநில அரசு வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வது, சிறப்பு முகாம்கள் மூலம் பரிசோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 504நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் புதுச்சேரியில் 438 நபர்களுக்கும், காரைக்காலில் 35 நபர்களுக்கும், ஏனாமில் 27 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 4878 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 13783 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் புதுச்சேரியில் 12 நபர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19026 ஆக உயர்ந்துள்ளது.

Next Story