Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை.!

புதுச்சேரி : 20 ஆயிரத்தை தாண்டிய  கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Sep 2020 6:50 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றை பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று பரவி வருகிறது. புதுச்சேரியில் மாநிலத்தில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 414நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் புதுச்சேரியை சேர்ந்த 308 நபர்களுக்கும், காரைக்காலை சேர்ந்த 74 நபர்களுக்கும், ஏனாமை சேர்ந்த 29 நபர்களுக்கும், மாஹேவை சேர்ந்த 3 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தற்போது 4805 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 15027 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் 8 நபர்களும், காரைக்காலில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20226 ஆகவும் உயர்ந்துள்ளது.

Next Story