Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 21ல் செமஸ்டர் தேர்வு.!

புதுச்சேரி : பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 21ல் செமஸ்டர் தேர்வு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2020 10:03 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என கோரிக்க எழுந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றமும் தேர்வை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக்கான தேதியை அறிவித்தது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , புதுச்சேரி பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் நடத்துவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஒரு வழிகாட்டுதலையும், ஜூலை 6 ஆம் தேதி திருத்தப்பட்ட வழிகாட்டுதலையும் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வழங்கியுள்ளது.


மேலும், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ஆன்-லைன், ஆப்-லைன் மற்றும் கலப்பு முறையில் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எனவே, மாணவர்கள் தங்களது விருப்படி ஆன்-லைன், ஆப்-லைன் மற்றும் கலப்பு முறையில் தேர்வு எழுத பதிவு செய்யலாம். மாணவர்களின் விருப்பத்தை அந்தந்த கல்லூரி முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப செப்.14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளை மறுபரிசீலனை செய்து, திருத்தப்பட்ட தேர்வு தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செப்.21 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கும். மாணவர்களின் விருப்பத்திற்கேற்றபடி தேர்வுகளை சீராக நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்து தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story