Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : 3 போலீசாரை கைது செய்த காவல்துறையினர் - நடந்தது என்ன..?

புதுச்சேரி : 3 போலீசாரை கைது செய்த காவல்துறையினர் - நடந்தது என்ன..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2020 5:38 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்படமால் உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் மதுபானங்கள் கடத்தி வராமல் இருக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருக்கனூர் பகுதியையொட்டி உள்ள, விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் சிலர் மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற புதுச்சேரி காவலர்கள் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மதுகுடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறித்து விரட்டி அடித்தனர். இது குறித்து புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு புகார் சென்றது.





இதன் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காவலர்கள் 4 பேரும் தவறாக நடந்து இருப்பதும், மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்து சென்று இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து 4 காவலர்களையும் சஸ்பெண்டு செய்து சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் 4காவலர்கள் மீதும் திருக்கனூர் போலீசார் 7-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை தேடி வருகின்றனர்.





Next Story