Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு 30 லட்ச ரூபாய் அபதாரம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.!

புதுச்சேரி: ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு 30 லட்ச ரூபாய் அபதாரம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.!

JananiBy : Janani

  |  9 Oct 2020 11:15 AM GMT

புதன்கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு 30 லட்ச ரூபாய் அபதாரம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2017 இல் மருத்துவத்தில் முதுகலை படிப்புக்கான மாணவ சேர்க்கையில் மத்திய சேர்க்கை குழு(CENTAC) மற்றும் இந்திய மருத்துவக் குழு(MCI) பட்டியல் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாகச் சேர்ந்த 65 மாணவர்களின் சேர்க்கையை ரத்துசெய்ய வேண்டும் என்ற MCI உத்தரவையும் நீதிமன்றம் ஒத்துக்கொண்டது உத்தரவு பிறப்பித்தது.


2017-18 இன் கல்வியாண்டின் PG மருத்துவ படிப்புகளுக்கான CENTAC மூலம் நடைபெற்ற சேர்க்கையைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி அரசாங்கம் மற்றும் CENTAC அனுமதியில்லாமல் கல்லூரிகள் மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சேர்க்கையை நடத்தியது. அதன்பின்னர் MCI அந்த சேர்க்கைகளை ரத்துசெய்தது.

MCI உத்தரவை எதிர்த்து நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் கொண்டுவந்த மனுவுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுகளை முன்வைத்தார். மாணவர்கள் அனைவரும் மூன்றாண்டு படிப்புகளை முடித்து இறுதி தேர்வுக்கான முடிவுக்குக் காத்துக்கொண்டிருக்கின்றனர். "மாணவர்களின் தேர்வு முடிவுகள் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த வழக்கை விசாரிப்பதில் தாமதப்படுத்தியதுக்கு நீதிமன்றமும் குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

விதிமுறைகளை மீறி முற்றிலும் சட்டவிரோதமாக நடைபெற்ற சேர்க்கையில் மாணவர்களின் பங்கைக் கூறமுடியாது என்றும் MCI வாதிட்டது. மேலும் சேர்க்கைகள் அனைத்தும் நிறுத்தவேண்டும் என்றும் குழு கூறியது. "விதிமுறைகளை மீறி மெரிட் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் மற்றும் CENTAC மூலம் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி வழங்காதது போன்றவற்றுக்கு அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும்," என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story