Top
undefined
Begin typing your search above and press return to search.

"புதுச்சேரியில் தாமரை மலரும்" - பா.ஜ.க பொதுச்செயலாளர் CT ரவி சூளுரை!

புதுச்சேரியில் தாமரை மலரும் - பா.ஜ.க பொதுச்செயலாளர் CT ரவி சூளுரை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2020 12:32 PM GMT

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் இன்ற்ய் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான CT ரவி, "பா.ஜ.க-வில் இணைவதற்காகப் பல அரசியல் தலைவர்களும், மாற்றுக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் எங்களைத் தொடர்புகொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க-வைப் பலப்படுத்துவதுதான் எங்களின் அடிப்படை இலக்கு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு, முழு தோல்வியைடைந்திருப்பது கொரோனா காலத்தில் வெளிப்படையாகியிருக்கிறது. அதனால்தான், மத்திய அரசு புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கவிருப்பதாகத் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு அதுபோன்ற எண்ணமும் ஏதுமில்லை.

தங்கள் தோல்வியை மறைக்கவே பா.ஜ.க மீது பொய்க் குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி சுமத்துகிறார். எந்த அடிப்படையில் அப்படிக் குற்றம சுமத்துகிறார் என்று தெரியவில்லை. அதேபோல புதுச்சேரி ஆளுநர் மாளிகை பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமாகச் செயல்படுவதாக முதல்வர் குற்றம்சாட்டுவதும் தவறானது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் சாலையில் இறங்கிப் போராடுகிறோம்." என்று தெரிவித்தார்.

Next Story