Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : 57 நாட்களுக்கு பிறகு உள்ளூர் பேருந்து சேவை தொடங்கியது - காரைக்காலுக்கு பேருந்து சேவை தொடக்கம்!

புதுச்சேரி : 57 நாட்களுக்கு பிறகு உள்ளூர் பேருந்து சேவை தொடங்கியது - காரைக்காலுக்கு பேருந்து சேவை தொடக்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2020 5:42 AM GMT

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட தினத்திலிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது, அதன்படி புதுச்சேரியில் 57 நாட்களுக்கு பிறகு நேற்று உள்ளூர் பேருந்து சேவை தொடங்கியது.




தொடர்ந்து புதுச்சேரி பிராந்தியத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு பேருந்து இயக்க புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் முடிவு செய்து கடலூர் நாகை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று இன்று காலை காரைக்காலுக்கு பேருந்து இயக்கப்பட்டது, சமூக இடைவெளியை கடைபிடிக்க 57 பேர் பயணம் செய்யும் பேருந்தில் 32 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.





மேலும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கிருமிநாசினி கையில் தெளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டனர், பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.





புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் கடலூர் மற்றும் நாகை ஆகிய இரு மாவட்டங்களை கடந்து காரைக்காலுக்கு செல்வதால் தமிழகத்தின் இரு மாவட்ட எல்லைகளை தாண்டும் போது பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என இரு மாவட்ட ஆட்சியர்களும் நிபந்தனையுடன் இந்த பேருந்து சேவையை அனுமதித்தனர்.

Next Story