Top
undefined
Begin typing your search above and press return to search.

அப்பன் பெயர் வைத்து கட்சி பொறுப்புக்கு வந்தவன் தானே? PTR தியாகராஜனை வெளுத்து வாங்கும் தி.மு.க மூத்த உறுப்பினர் - பறிக்கப்படுகிறதா பதவி?

அப்பன் பெயர் வைத்து கட்சி பொறுப்புக்கு வந்தவன் தானே? PTR தியாகராஜனை வெளுத்து வாங்கும் தி.மு.க மூத்த உறுப்பினர் - பறிக்கப்படுகிறதா பதவி?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 May 2020 4:28 AM GMT

தி.மு.க எம்.எல்.ஏ-வும், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான PT தியாகராஜன் திமிர் பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எதிர் கட்சியினர் ஏதேனும் கேள்வி கேட்டால் கூட ட்விட்டரில் ப்ளாக் செய்து விடுவார். அந்த அளவுக்கு சகிப்புத்தன்மை. அது மட்டுமின்றி எப்போதும் நான் பணக்கார குடும்பம், பெரிய குடும்பம், நீயெல்லாம் என்னை கேள்வி கேக்கறியா போன்ற மேட்டுக்குடிதனத்துடன் தான் எப்போதும் பேசுவார். இதை பார்த்த உடன்பிறப்புகள் பல முறை முகம் சுளித்தது உண்டு. ஆனால், இதை வரை பொறுத்த உடன்பிறப்புகள் வேறு வழியின்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த ப்ளாக் செய்யும் பழக்கம் எதிர் கட்சியினருக்கு மட்டும் இல்லை, சொந்த கட்சிக்காரனுக்கும் என்பது தான் தி.மு.க-வினரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

மதுரை வடக்கு பகுதியை சேர்ந்த தனசேகர் 25 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க-வின் உறுப்பினராக இருக்கிறார். இவர் தியாகராஜனிடம் எப்போதோ ட்விட்டரில் ஏதோ கேள்வி கேட்டுள்ளார் என தெரிகிறது.


ஆனால் தியாகராஜனுக்கோ, தி.மு.க உறுப்பினரா மற்றவரா என்ற கவலை எல்லாம் என்றுமே இருந்தது இல்லை. "என்னையே கேள்வி கேக்கறியா? எனக்கே ஐடியா குடுக்கிறியா" ப்ளாக்.. என்பது தான் அவர் செயல்பாடாக இருக்கிறது. இந்நிலையில் தன்னை தியாகராஜன் ப்ளாக் செய்துள்ளார் என்ற விஷயம் தெரிந்தவுடன் அவரை வெளுத்து வாங்கியுள்ளார் தி.மு.க மூத்த உடன்பிறப்பு தனசேகர்.

அவர் தியாகராஜன் குறித்து "இவரை போல மூன்றாம் கட்ட தலைவர்கள் செயலால் தான் கட்சிக்கு கெட்ட பெயர். தன் தந்தையின் பெயரால் கட்சிக்கு வந்தவர் இடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும். பொறுமை இல்லாதவர் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாதவர் ஒரு அணிக்கு தலைவராக இருக்க முடியாது. பரம்பரை திமுக குடும்பம். கலைஞ்சருக்காக. இது தனி ஐடி ஆக இருந்தால் கேட்க போவது இல்லை. திமுகவின் பொறுப்பில் இருந்தால் பதில் சொல்லி ஆக வேண்டும். இங்கு இருப்போர் பலருக்கு அய்யா அன்பழகன் கையொப்பம் இட்ட கார்டு வைத்து இருக்க வாய்ப்பு இல்லை. பதில் சொல்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.





ஆனால் இதற்கெல்லாம் தியாகராஜன் அசர மாட்டார் என்றும், அவர் உலகமே தனி எனவும் தி.மு.க வட்டாரம் தெரிவிக்கிறது. இது போன்ற திமிர் பிடித்த நடவடிக்கைகள் குறித்து பல மாதங்களாக ஸ்டாலினுக்கு புகார் சென்று வருவதாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரன் பறிக்கப்படுகிறதா தியாகராஜனின் பதவி என்பதே இப்போது தி.மு.க-வின் ஹாட்டாக்.

Next Story