Kathir News
Begin typing your search above and press return to search.

மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் வாக்குகள் இனிக்கும் - தீபாவளி வாழ்த்து கூற வாய் கசக்குமா?

மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் வாக்குகள் இனிக்கும் - தீபாவளி வாழ்த்து கூற வாய் கசக்குமா?

மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் வாக்குகள் இனிக்கும் - தீபாவளி வாழ்த்து கூற வாய் கசக்குமா?

Mohan RajBy : Mohan Raj

  |  14 Nov 2020 10:06 AM GMT

பண்டிகைகள் பல ஆத்திகம் முறைப்படி பல இதிகாச வரலாறுகள், ஆண்டவனின் அவதார கதைகளால் காரணம் கூறப்பட்டு கொண்டாடப்பட்டாலும் இன்றைய வாழ்வில் அது மக்களின் மன இறுக்கத்தை போக்கும் ஓர் முறையாகும். தினமும் உழைத்து பிழைப்போர்க்கும், ஒரே மாதிரியான வாழ்க்கை வாழும் விளிம்பு நிலை மனிதர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை பண்டிகை தினங்கள் ஒரு மாற்றத்தை தரும். இதிகாச வரலாறுகள் மதிக்காவிட்டாலும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற பண்டிகைகளை மக்களின் உணர்வை மதித்தாவது கொண்டாட வேண்டும்.

அது போலதான் அரசியல் தலைவர்களும், தங்களையும் தங்கள் வாழ்வையும் மக்களுக்கு அர்பணிப்பதாக காட்டி கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டால் இதுபோன்ற பண்டிகைகளில் மக்களுடன் நின்று கொண்டாட வேண்டும் அல்லது குறைந்த பட்சம் பெயருக்காவது தனது வாழ்த்தை பதிவு செய்ய வேண்டும். தீபாவளி இந்து மக்கள் பண்டிகை ஆனால் இந்து மக்களை தன் வாழ்நாள் எதிரியாக பார்க்கும் தி.மு.க-வோ ஓர் வாழ்த்து செய்தியை கூட கூற மனமின்றி இந்துக்கள் மக்கள் மீதான வெறுப்பை எரிமலையாய் கக்குகிறது.

சிலர் அறிவாளியாக கேட்பதாக நினைத்துக்கொண்டு கேட்கலாம் ஏன் வாழ்த்து சொன்னால் தான் பண்டிகையா என! ஆமாம், உங்கள் அறிவார்ந்த கருத்தை இருகரம் கூப்பி ஏற்கிறோம் வாழ்த்து சொன்னால் மட்டும் பண்டிகை அல்ல. ஆனால் இதே வார்த்தை போன ரம்சான் பண்டிகைக்கு வரவில்லையே ஏன்? வரும் டிசம்பர் மாதத்தில் இதே வார்த்தை கிருஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வாயில் இருந்து வருமா? இந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் அவர்கள் பண்டிகைக்கு வாழ்த்து வேண்டாமா? இந்துக்கள் ஓட்டு மட்டும் தி.மு.க'விற்கு இனிக்குமா?

இதை எத்தனை முறைதான் கேட்பீர்கள் என சிலருக்கு அலுப்பு தட்டலாம், தி.மு.க எத்தனை முறை வாக்கு கேட்டு வந்தாலும் தி.மு.க-விற்கு எப்படி அலுக்கவில்லையோ அது போலதான் இதுவும். எப்படி 5 முறை ஆட்சியில் இருந்து கொள்ளை அடித்து ஈரேழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்தாலும் தி.மு.க-விற்கு அலுக்கவில்லையோ அதுபோலதான், தகப்பன் கருணாநிதி 5 முறை முதல்வர் பதவியில் இருந்தாலும் அந்த பதவி எப்படி மகனுக்கு அலுக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலிக்கு அலைகிறாரோ அதுபோலதான் எங்களுக்கும் தி.மு.க ஏன் வாழ்த்து கூறவில்லை என கேட்பதில் அலுக்காது.

சாட்டிலைட் சேனல்கள் வைத்து பண்டிகையை முன்னிட்டு விளம்பரங்களில் சம்பாதிக்க மட்டும் இனிக்கும் தி.மு.க-விற்கு ஒரு வாழ்த்து கூற வாய் கசக்கும்.

பொதுவான இந்துக்களுக்கு உங்கள் வாழ்த்துக்கள் வேண்டாம் தி.மு.க தலைவரே ஏனென்றால் உங்கள் வாழ்த்து செய்தி கேட்ட பின் தலையில் எண்ணெய் வைக்க பொதுவான இந்துக்கள் ஒன்றும் மானம் கெட்டவர்கள் அல்ல. மான, ரோஷமுள்ளவர்கள் அவர்களுக்கு உங்கள் வாழ்த்து தேவையில்லை.

ஆனால் உங்கள் கட்சியில் இருக்கும் 90 சதவீதம் பேர் அதாவது ஸ்டாலின் அவர்களே உங்கள் பாஷையில் சொன்னால், "தி.மு.க-வில் இருப்பது 90 சதவீதம் பேர் இந்துக்கள், ஆக தி.மு.க என்றும் இந்துக்களுக்கு எதிரி அல்ல" என கூறுவீர்களே அந்த 90 சதவீதம் பேர் உங்கள் படங்களை ஏன் தனது சட்டையில் வைத்திருக்கிறோம் என தெரியாமல் சுற்றுகிறார்களே அவர்களுக்கு கூற வேண்டாமா?

அண்ணாதுரை மற்றும் உங்கள் தகப்பன் படத்தை ஏதோ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனன் படங்களை வைப்பது போல இன்னும் வீடுகளில் வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு வாழ்த்து கூற கூடாதா? ஏன் அவர்கள் தீபாவளி கொண்டாட மாட்டார்களா?

ஐயப்பனுக்கு மாலை அணிவிப்பவர்கள் கூட 48 நாள் அதாவது ஒரு மண்டலம் மட்டும்தான் காவி வேட்டியில் இருப்பார்கள் ஆனால் உங்கள் கட்சியின் கரைவேட்டியை வாழ்நாள் முழுவதும் கட்டும் உடன்பிறப்பு ஒரு வாழ்த்து கூற கூட தகுதியில்லாமலா வக்கத்து போய்விட்டான்?

அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுள்ளது ஓர் சமூகம், தகுந்த நேரத்தில் தங்கள் கேள்வியை கேட்டு அதற்கு பதிலையும் உங்களுக்கு தரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News