Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் கும்ப மரியாதையை அவமதித்த உதயநிதி சர்ச்க்கு வாக்குறுதி - தி.மு.கவின் இந்து வெறுப்பு.!

கோவில் கும்ப மரியாதையை அவமதித்த உதயநிதி சர்ச்க்கு வாக்குறுதி - தி.மு.கவின் இந்து வெறுப்பு.!

கோவில் கும்ப மரியாதையை அவமதித்த உதயநிதி சர்ச்க்கு வாக்குறுதி - தி.மு.கவின் இந்து வெறுப்பு.!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2020 9:18 AM GMT

தமிழக அரசியல் கட்சிகள் வாக்கு அரசியலுக்காக சமுதயாய மக்களின் வாக்குகளை பெற சலுகைகள் மற்றும் அதன் தலைவர்களை கொண்டாடுவார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு மதமே ஒரு அரசியல் கட்சியின் கூட்டணியை ஒதுக்கப்போகிறது என்றால் அது இந்து மதம் மட்டுமே, அந்த கட்சி தி.மு.க கூட்டணிதான்.

இந்த வாக்கு அரசியலை மற்ற கட்சிகளை விட தி.மு.க நன்கு உணர்ந்துள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் இந்நு மதத்தை மட்டும் மட்டம் தட்டி, இந்து மத சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்தி, எப்படியாவது தமிழகத்தில் இந்து மதத்தின் அடிச்சுவடே இல்லாமல் செய்ய தி.மு.க கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறது. இந்த விழிப்புணர்வு இந்து சமுதாய மக்களிடம் தற்பொழுது அதிக அளவில் தென்படுகிறது.

இதனை நன்கு தி.மு.க உணர்ந்துவிட்டதை அதன் நடவடிக்கைகளில் இருந்தே கணிக்க முடிகிறது. இதனை சமீபத்திய பட்டத்து இளவரசராகிய உதயநிதியின் செயல் உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக உதயநிதி திருக்குவளையில் துவங்கி தனது 100 நாள் தேர்தல் பரப்புரையை செயல்படுத்தி வருகிறார்.

இந்ந நிகழ்வின் துவக்கமாக திருக்குவளையில் துவங்கிய அவர், வேதாரணியம், கோடியக்காடு, தோப்புத்துறை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை என கடைகோடி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதில் அவர் பிரச்சாரத்தை துவங்கிய பொழுது திருச்சியில் கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவிலில் பூரண கும்ப மரியாதையை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த திட்டத்தின்படி உதயநிதி வரும்போது பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் சிவாச்சாரியார்கள் காத்திருந்தனர்.

ஆனால் உதயநிதி வரும்போது அந்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்ததுடன், பரிவட்டத்தையும் ஏற்க வில்லை மேலும் விபூதி, குங்குமத்தை கூட சிவாச்சாரியார்களை வைக்க அனுமதிக்காமல் சென்றார். இந்த நிகழ்வு இந்துக்களை உதயநிதி செருப்பாக நினைத்தது போல் இருந்தது.

ஆனால் நேற்று நாகை வந்த உதயநிதி வேளாங்கண்ணி சர்ச் பேராயர் பிரபாகர் அவர்களை பார்க்க முடியவில்லை என காணொளி காட்சி மூலம் அவரிடம் பேசியது மட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பதிவிலும், "வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் தந்தை பிரபாகர் அடிகளார் அவர்களுடன் காணொலி வாயிலாக பேசினேன். அடிமை அரசின் சிறுபுத்தியால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. எனினும், சிறுபான்மையினரின் அரணாக கழகம் என்றும் திகழும் என்ற தலைவர் @mkstalin அவர்களின் வாக்குறுதியை அடிகளாரிடம் தெரிவித்தேன்"
என பதிவிட்டிருந்தார்.

அதாவது இந்து சமுதாயத்தை அவமதித்துவிட்டு சிறுபான்மையினரின் அரணாக தி.மு.க திகழும் என தி.மு.க'வின் இந்து மத காழ்ப்புணர்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இந்த நிகழ்வால் தி.மு.க'வின் இந்து மத வெறுப்பை எக்காலத்திலும் மாற்ற இயலாது தேர்தல் ஒன்றே பாடம் கற்பிக்கும் வழி என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News