Top
undefined
Begin typing your search above and press return to search.

நவராத்ரியில் இந்த பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்தால் செல்வம் பெருகும்.!

நவராத்ரியில் இந்த பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்தால் செல்வம் பெருகும்.!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  17 Oct 2020 1:30 AM GMT

நாடே பண்டிகை உற்சாகத்தில் மூழ்கியுள்ளது எனலாம். கொடுந்தொற்று, தனிமைப்படுத்துதல் போன்று நாடு சந்தித்த பல துருதிர்ஷடவசமான நிகழ்வுகளுக்கு நடுவே, வெளிச்சகீற்றாய் பண்டிகை காலம். பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு நடுவே. இந்து மரபில் இந்த மாதம் மிகவும் முக்கியமானது. நவராத்ரி என்ம் ஒன்பது இரவுகளும் தேவியின் அருளுக்கு பாத்திரமாக நமக்கு கிடைத்த வரம்.

இந்த பண்டிகை ஒன்று மட்டுமே நாடு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பழக்க வழக்கங்களுடன் கொண்டாடப்படுகிறது. நவராத்ரி அன்று செய்ய வேண்டிய சடங்குகள் குறித்து அனைவரும் பரவலாக அறிந்திருகிறோம். இதற்கிடையே நவராத்ரியில் குறிப்பிட்ட இந்த பொருட்களை வீட்டிற்குள் கொண்டுவந்தால் செல்வ வளம், செளபாக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.

அதில் முதலாவதாக தாமரை மலர். மஹாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் இந்த மலரை, நவராத்ரி வேளையில் தினமும் பூஜை அறையில் வைப்பதால் மஹாலட்சுமி அருளை பெற முடியும். அடுத்து தங்கம் அல்லது வெள்ளி போன்ற சுப முதலீடுகளை நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால் அதனை நவராத்ரி முதல் நாளில் செய்வதன் மூலம் மேலும் பெருகும்.

அடுத்து மயிலிறகு, மயிலை தனக்கு மிகவும் நெருக்கமாக வைத்து கொண்டவர் தேவி சரஸ்வதி. சரஸ்வதியின் அருளை பெறவும், வாஸ்து தோஷம் ஏதேனும் இருப்பின் அவை நீங்கவும் மயிலறகை நவராத்ரியில் வீட்டினுள் கொண்டு வாருங்கள். இது நல்ல ஆற்றலை வீட்டிற்கு கூட்டும். அடுத்து, அமர்ந்த நிலையிலிருக்கும் மஹாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தினை வீட்டிற்குள் நவராத்ரி வேளையில் கொண்டு வருவது நன்மை பயக்கும்.

அடுத்து நவராத்ரி என்பது தேவி மார்களை கொண்டாடும் நிகழ்வாகும். அதனால் இது பெண்கள் கொண்டாடும், பெண்மையை கொண்டாடும் திருவிழா. இந்த நாளில் மங்களகரமான பொருட்களான குங்குமம், மருதாணி, வளையல், ஒப்பணை பொருட்கள், கொலுசு, சீப்பு போன்றவை இந்த நாளில் வாங்கி வீட்டில் வைப்பது உகந்ததாகும்.

இந்த நன்நாளில் தேவியின் படத்தை விக்ரகத்தை வடகிழக்கு திசையில் வைத்து வணங்க வேண்டும். மேலும் இந்த ஒன்பது நாட்களும் கலசத்தை ஜோடித்து வைப்பது உகந்தது. ஆனால் அதை பிரத்யேகமாக கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

Next Story