Top
undefined
Begin typing your search above and press return to search.

இன்று புரட்டாசி அமாவாசை, இன்றைய நாளில் தர்பணம் வழங்குவதால் ஏற்படும் அதிசயம்

இன்று புரட்டாசி அமாவாசை, இன்றைய நாளில் தர்பணம் வழங்குவதால் ஏற்படும் அதிசயம்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  16 Oct 2020 12:30 AM GMT

முழு நிலவு பௌர்ணமி என்றும், நிலவு முழுதாக மறைக்கப்பட்ட நாள் அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று நிலவு இல்லாமல் போவதில்லை மாறாக நிலவு மறைக்கப்படுகிறது !!. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.. இந்த நாளை இந்துக்கள் "தர்ப்பணம்" செய்வதற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். அதாவது இறந்துபோன ஆத்மாக்களை அமைதிப்படுத்துவதற்கான நாளாக இது கருதப்படுகிறது. அமாவாசையுடன் தொடங்கும் மாதத்தை சுக்களாபக்ஷம் என்று கூறுவதுண்டு.

அவ்வகையில் இன்று புரட்டாசி கடைசி அமாவசை. புரட்டாசி என்பதே இந்து மரபில் சிறப்பு வாய்ந்த மாதம். அதிலும், அந்த மாதத்தில் வரும் அமாவாசை என்கிற போது அதன் சிறப்பு இன்னும் கூடுகிறது. அமாவாசை என்பது இந்துக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. நிலவானது ஒரு மாதத்தில் 15 நாட்கள் தேய்ந்தும் 15 நாட்கள் வளர்ந்தும் வரும். சூரிய ஒளியால் பூமியின் நிழல் நிலவை படிப்படியாக மறைத்து விலகுவதால் தேய் பிறை வளர்பிறை என்று நிலவின் வடிவம் ஒளி மிகுந்து முழு வடிவத்துடனும் 15 நாட்கள் கழித்து முழுதாக மறைந்து ஒன்றுமே தெரியாமலும் இருக்கும்.

அமாவாசையின் போது பிரபஞ்ச ஆற்றலில் ஏற்படும் சமநிலை இன்மை காரணமாக, தேவ லோகத்தில் இருப்போர் பூலோகம் நோக்கி வருவதாக சொல்லப்படுவது ஐதீகம். அதனாலேயே அவ்வாறு வரும் தேவர்கள், மூதாதையரின் அனுகிரகத்தை பெற வேண்டி அமாவாசை நாட்களில் தர்பணம் கொடுக்க சொல்வது வழக்கமாக உள்ளது.

அமாவாசை நாள் அதீத சக்திவாய்ந்த நாளாக பொதுவாக கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக ஜனவரி-பிப்ரவரி மாதம் வரும் மௌனி அமாவாசை யும், செப்டம்பர்-அக்டோபர் மாதம் வரும் மஹாளய அமாவாசையும் மிக மிக சக்தி வாய்ந்தவை. இந்தியாவின் பிக பிரபலமான பண்டிகையான தீபாவளி இந்த மஹாளய அமாவாசையில் தான் வருகிறது. இந்த நாட்களில் விரதம் இருப்பது நம் மனதையும் உடலையும் எண்ணங்களையும் சீர் படுத்தி இறைவனை நோக்கி அழைத்து செல்லும்.

ஒரு குடும்பத்தின் சுபிக்‌ஷத்திற்கு மூதாதையரின் அருள் முக்கியமானதாகிறது. எனவே அமாவசையில் கொடுக்கிற தர்பணம் நம் பித்ருக்களை நேரடியாக சென்று சேர்ந்து அவர்களின் அருளுக்கு பாத்திரமானவர்களாக நம்மை மாற்றுகிறது.

Next Story