Top
undefined
Begin typing your search above and press return to search.

அர்ஜுனா விருதுக்கு பும்ரா - ஷிகர் தவான் பெயர்கள் பிசிசிஐ பரிந்துரை - விருதை வெல்லப்போவது யார் ?

அர்ஜுனா விருதுக்கு பும்ரா - ஷிகர் தவான் பெயர்கள் பிசிசிஐ பரிந்துரை - விருதை வெல்லப்போவது யார் ?

Vignesh KBy : Vignesh K

  |  14 May 2020 11:05 AM GMT

விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் கௌரவித்து அர்ஜுனா விருது வழங்கப்படும். இதனை தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டிருந்தது.

இதனிடையே பிசிசிஐ இந்திய அணியிலிருந்து வேக பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஆகிய இருவரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. சென்ற ஆண்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி பெயர்கள் பரிந்துரை செய்தது. அதில் ரவீந்திர ஜடேஜா விருதை தட்டிச் சென்றார்.

2018 ஆம் ஆண்டு ஷிகர் தவான் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு இந்திய பெண்கள் அணியின் ஸ்மிரிதி மந்தனா அர்ஜுனா விருதை வென்றார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2013 ஆம் ஆண்டு விராட் கோலி, 2014 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின், 2015ஆம் ஆண்டு ரோகித் சர்மா, 2016ஆம் ஆண்டு ரஹானே, 2017ஆம் ஆண்டு புஜாரா, 2019ஆம் ஆண்டு ஜடேஜா ஆகியோர் அர்ஜுன விருதுகளை வெற்றி பெற்றுள்ளனர்.


Next Story