Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் தொடரை ரசிகர்கள் இன்றி நடத்தலாம் - ஹர்திக் பாண்ட்யா.!

ஐ.பி.எல் தொடரை ரசிகர்கள் இன்றி நடத்தலாம் - ஹர்திக் பாண்ட்யா.!

Vignesh KBy : Vignesh K

  |  26 April 2020 12:56 PM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு கொரோனா வைரஸின் அச்சத்தால் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹர்டிக் பண்டியா ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல் தொடரை நடத்தலாம் என கூறியுள்ளார்.

இதனைப் பற்றி அவர் பேசுகையில்: ரசிகர்கள் இல்லாமல் ரஞ்சிக் கோப்பையை விளையாடி உள்ளேன். அந்த உணர்வு புதிதாக இருந்தது. இதனை போலவே ஐ.பி.எல் போட்டியையும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுவது புதிய ஆப்சனாக இருக்கும். மக்கள் வீட்டில் இருந்த படியே போட்டியை பார்க்கலாம் என்றார்.

Next Story