Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகின் தலைசிறந்த மூன்று பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த டேவிட் வார்னர் - யார் யார்?

உலகின் தலைசிறந்த மூன்று பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த டேவிட் வார்னர் - யார் யார்?

Vignesh KBy : Vignesh K

  |  27 April 2020 12:29 PM GMT

கொரோனா வைரஸ் காரணத்தால் ஐபிஎல் போட்டி உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளை தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் லைவ் சாட் மூலம் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.

அதில் வார்னர் கூறியது: நான் உங்களை (கேன் வில்லியம்சன்), ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகிய மூவரையும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்துள்ளேன் என்றார். மேலும் இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

Next Story