Top
undefined
Begin typing your search above and press return to search.

சிக்ஸர் அடிக்கும் பந்துகளை பேட்ஸ்மேன்களே கொண்டு வந்து தர வேண்டும் - சாஹல்.!

சிக்ஸர் அடிக்கும் பந்துகளை பேட்ஸ்மேன்களே கொண்டு வந்து தர வேண்டும் - சாஹல்.!

Vignesh KBy : Vignesh K

  |  30 April 2020 1:17 PM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் அதிகமாக பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் 30,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1008 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நடைபெறவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனிடையே சமீபத்தில் ஐ.சி.சி போட்டிகள் நடைபெற்றாலும் பந்துகளில் எச்சில் துப்பி சுத்தம் செய்வதற்கு தடை தடை விதிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு பந்துவீச்சாளர்கள் ஐ.சி.சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் சாஹல் சிக்ஸர் அடிக்கும் பந்துகளை பேட்ஸ்மேன்களே கொண்டு வந்து தர வேண்டும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இதனைப் பற்றி சாஹல் கூறியது: ஐசிசி இப்படி ஒரு விதி முறையை கூறினால், கையில் இருந்து பந்தை வீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் கடினமாக இருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்கு சுலபமாகி விடும்.

இதைப்போலவே சிக்ஸர் அடிக்கும் பந்தை பேட்ஸ்மேன்களே கொண்டு வந்து தர வேண்டும் என்ற விதிமுறையை எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story