Top
undefined
Begin typing your search above and press return to search.

ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம், காலி மைதானத்தில் கூட போட்டியை நடத்தலாமே? - சொல்வது யார்?

ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம், காலி மைதானத்தில் கூட போட்டியை நடத்தலாமே? - சொல்வது யார்?

Vignesh KBy : Vignesh K

  |  1 May 2020 11:58 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் 33,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1075 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நடைபெறவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற மாதம் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த சீசன் போட்டி நடக்குமா? என்ற கேள்விகளும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் போட்டி நாடாகும் என கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும்,காலி மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என்ற கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே இந்தியா அணியின் பேட்ஸ்மேன் அஜின்க்யா ரகானே ரசிகர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றால் அப்படியே போட்டியை நடத்தலாம் என ரகானே கூறியுள்ளார்.

இதனை பற்றி அவர் கூறியது: கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் காலி மைதானத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. இதனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எங்களுக்கு ஒன்றும் இல்லை. ரசிகர்களின் பாதுகாப்புதான் முக்கியமானது. அவர்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் போட்டியை பார்க்கலாம். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் மற்றும் மகிழ்ச்சியாக ஏற்று கொள்ள வேண்டும் என்றார்.

அஜின்க்யா ரகானே பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினர். தற்போது ஐ.பி.எல் 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

Next Story