Top
undefined
Begin typing your search above and press return to search.

சி.எஸ்.கே அணியின் ஜெர்சியை முதலில் அணிந்த போது வித்தியாசமாக இருந்தது - ஹர்பஜன் சிங்.!

சி.எஸ்.கே அணியின் ஜெர்சியை முதலில் அணிந்த போது வித்தியாசமாக இருந்தது - ஹர்பஜன் சிங்.!

Vignesh KBy : Vignesh K

  |  7 May 2020 10:27 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் நடவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகள் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சி.எஸ்.கே ஜெஸ்ஸியை முதலில் அணிந்த போது வித்தியாசமாக இருந்தது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் ஹர்பஜன் சிங் 2008 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் பத்தாண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். பின்பு 2018ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சி.எஸ்.கே உடனான இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலில் அவர் கூறியது: சி.எஸ்.கே ஜெஸ்ஸியை முதலில் அணிந்த போது விசித்திரமாக இருந்தது. இது எனக்கு கனவு போல் இருந்தது.

எப்போது எல்லாம் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணியும் ஆட்டம் நடக்கும் போது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாக கூறப்படும். இந்த ஆட்டங்கள் மிகவும் சவாலாக இருக்கும். திடீரென்று மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸியை அணியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்தது போது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

2018ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை விளையாடினோம். ஆனால் அந்த போட்டி சீக்கிரமே முடிந்து விட்டது. சி.எஸ்.கே அணிக்கு விளையாடிய முதல் சீசன் முழுவதும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story