Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் சாதிப்பதற்கு இவர்கள் உதவியாக இருந்தனர் - நெகிழும் ரஹானே!

நான் சாதிப்பதற்கு இவர்கள் உதவியாக இருந்தனர் - நெகிழும் ரஹானே!

Vignesh KBy : Vignesh K

  |  9 May 2020 1:10 PM GMT

நான் கிரிக்கெட் வாழ்க்கையில் சாதிக்க சீனியர் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உதவியாக இருந்தனர் என அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டிருப்பவர் அஜின்கியா ரஹானே. இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். இவர் ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக சென்ற ஆண்டு வரை விளையாடி வந்தார். தற்போது இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இதனைப்பற்றி ரஹானே கூறியது: "இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடுவது புதிய அனுபவமாக இருக்கும். இந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷாப் பன்ட் ஆகிய இந்தியா வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் ஏற்கனவே விளையாடி இருக்கிறேன். அதனால் இந்த ஆண்டு இணைந்து செயல்பட எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது" என கூறினார்.

மேலும் சீனியர் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மாற்று ராகுல் டிராவிட் என்னுடைய "ரோல் மாடல்". இவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள் மட்டுமல்லாமல் சிறந்த மனிதர்கள். நான் கிரிக்கெட் வாழ்க்கையில் சாதிக்க நிறைய உதவிகளை செய்துள்ளனர். இதன்மூலம் இவர்களைப் போல சிறந்த வீரர்களாக செயல் பட முயற்சி செய்வேன் மற்றும் என்னை ராகுல் டிராவிட் அவர்கள் உடன் ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.

Next Story