Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு - இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு.!

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு - இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  பாராட்டு.!

Vignesh KBy : Vignesh K

  |  12 May 2020 11:44 AM GMT

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை வடிவேலும் பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி இவருக்கு 85 வயதாகிறது. இவர் ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு விற்பதால் அவரை இட்லி பாட்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சமயத்திலும் கமலாத்தாள் பாட்டி கஷ்டப்படும் மக்களுக்கு இட்லி வழங்கி வருகிறார். இதில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூரிலிருந்து வருபவர்கள் போன்றவர்களுக்கு உணவு அளித்து வருகிறார். இதில் 400க்கும் மேற்பட்டோருக்கு உணவு அளித்து வருகிறார்.


இந்த நிலையில் கமலாத்தாள் பாட்டியை பற்றி அறிந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மற்றும் சிறந்த பீல்டர்ருமான முகமது கைஃப் அவருடைய பாராட்டை தெரிவித்துள்ளார். இதனை பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது:


கடந்த 30 ஆண்டுகளாக வெறும் 1 பேருக்கு இட்லிகளை விற்பனை செய்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி என்ற 85 வயது பெண்மணி. ஊரடங்கு சமயத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிகவும் சிறந்த செயல் என பதிவிட்டுள்ளார்.மேலும், அவளுடைய தன்னலமற்ற சேவை ஒரு உத்வேகம்.

Next Story